Om oss

எம்மைப் பற்றி
எமது விளையாட்டுக் கழகம் 2001ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15 குடும்ப அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகத்தில் அப்போது 21 பிள்ளைகள் விளையாட்டுப் பயிற்சியில் பங்கு பற்றினார்கள். இக்கழகம் ஆரம்பிக்கும்போது சில குறிக்கோள்களின் அடிப்படைலிலேயே ஆரம்பிக்கப்பட்டது. எமது பிள்ளைகள் Norsk விளையாட்டுக்கழகங்களில் பயின்று வருகின்றார்கள். அவர்களுக்கு எம்மாலான மேலதிக உதவிப் பயிற்சி அளித்து அவர்களை முன்னேற்றி விடுவது.
எமது கழகத்திலுள்ள பிள்ளைகள் பெற்றேர்களிடையே தொடர்புகளையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துதல்.


எமக்குள் ஒரு ஒற்றுமையையும் பொழுதுபோக்கையும் ஏற்படுத்துதல். இப்படி ஆரம்பித்தபோதுதான் எமது கழகத்திலிருந்த அங்கத்தவர்கள் அனைவரினதும் விருப்பத்திற்கேற்ப 2001ஆம் ஆண்டு மார்கழி மாதம் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு Noreel என பெயர் சூட்டப்பட்டது. இதன் அர்த்தம் Norway Eelam என்பதாகும். அது படிப்படியாக வளர்ந்து வீறு நடை போட்டுக்கொண்டிருக்கின்றது. இப்பொழுது இக்கழகத்தில் 100 குடும்பங்களும் 200 பிள்ளைகளும்உள்ளனர் என பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.

மேலும் வாழ்க வளர்க என Noreel ஐ வாழ்த்துகிறோம்.

 

விதிமுறைகள்   
விளையாட்டுப் பயிற்சி ஆரம்பிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் சமூகமளிக்க வேண்டும்.


விளையாட்டுப் பயிற்சிக்கு சமூகமளிக்க முடியாவிடின் பயிற்சியாளரிடம் முன் அறிவித்தல் கொடுக்க வேண்டும். அப்படி 2 தடவைகள் அறிவித்தல் கொடுக்க தவறும் பட்சத்தில் பயிற்சியாளருடன் நேரடியாக தொடர்பு கொண்ட பின்பே அந்நபர் மீண்டும் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.

வருட சந்தாவை இரண்டு தவணைகளில் செலுத்தலாம். ஆனால் முடிவுத்திகதிக்குள் செலுத்த வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள நேரிடும்.

நிர்வாகம் எடுக்கும் முடிவுகளை சகல அங்கத்தவர்களும் ஏற்றுக்கொண்டு அதன்படி செயற்பட வேண்டும்.

எமது கழகம் விளையகட்டுக்களில் பங்கு பற்றும் நேரங்களில் எமது கழக அங்கத்தவர்கள் வேறு கழகத்திற்கு விளையாட முடியாது.

எமது கழகம் விளையகட்டுக்களில் பங்கு பற்றாத சந்தர்ப்பங்களில் எமது கழகத்திற்கு முன் அறிவித்தல் செய்த பின் எமது அங்கத்தவர்கள் வேறு கழகததுடன் இணைந்து விளையாடலாம்.

கழகத்தை விட்டு விலக விரும்புபவர்கள் கழக நிர்வாகத்திற்கு முன் அறிவித்தல் செய்த பின் கழகத்தை விட்டு விலகலாம்.

எமது கழகத்தில் அங்கத்தவராக இருக்கும்போதோ அல்லது எமது கழகத்தை விட்டு விலகிய பின்போ எமது கழகத்திற்கு முன் அறிவித்தல் கொடுக்காமல் வேறு கழகத்துடன் இணைந்து விளையாடியவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் எமது கழகத்தில் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்.