நோர்வே தமிழ்ச் சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி

வணக்கம்,

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப்போட்டி திட்டமிட்டவாறு எதிர்வரும் 02.02.2020, ஞாயிற்றுக்கிழமை Skedsmohallen இல் நடைபெறவுள்ளது.

இதன் முன்னாயத்தச் செயற்பாடாகக் கழகங்களுக்கான, பின்வரும் விளையாட்டுக்களுக்கான பயிற்சிகள் எம்மால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.

- நீளம் பாய்தல்
- உயரம் பாய்தல்

இடம்: Nordbyen flerbrukshall, Haavard Martinsens vei 30, 0978 Oslo.

காலம்: 23.01.2020 வியாழக்கிழமை  
நேரம்: 18:00 - 19:30

28.01.2020 செவ்வாய்க்கிழமை
நேரம்: 19:00 - 20:30

30.01.2020 வியாழக்கிழமை
நேரம்: 18:00 - 19:30

இப்பயிற்சிகளில் பங்கேற்றுப் பயன்பெறுமாறு அனைவரையும் அழைப்பதோடு, இதில் பங்கேற்பவர்களின் விபரங்களை எமக்கு முன்கூட்டியே அறியத்தருமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நட்புடன்,
விளையாட்டுப்பொறுப்பாளர்
நோர்வேத் தமிழ்ச்சங்கம் - 2020

Section: