நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை

உலகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது. அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் தக்வொண்டா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார்.

நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு. கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) நோர்வேயின் அதிசிறந்த வீரராகத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டு வரும் இவரே இப்பிரிவில் வெற்றி பெற்றவர்களில் குறைந்த இருதடவைகள் அதிசிறந்த ஸ்கன்டினேவிய (Scandinavia) வீரராகவும், கடந்த இருவருடங்களாக அதிசிறந்த நோர்டிக் (Nordic) வீரராகவும் தெரிவாகியது மட்டுமன்றிப் பல நாடுகளுக்கும் சென்று விளையாடிப் பெருமெண்ணிக்கையில் வெற்றிக் கிண்ணங்களைத் தனதாக்கிவரும் இவர் 2009ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய வெற்றிக்கிண்ணப் போட்டியில் குறைந்த வயதில் பங்குபற்றிய சிறப்பையும் கொண்டவர்.

Section: